asaathiyangal song lyrics

 asaathiyangal sathiyamae lyrics


அசாத்தியங்கள் சாத்தியமே

தேவா உந்தன் வார்த்தையாலே

அசையாத மலை கூட அசைந்திடுமே

அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே


எல்லா புகழும் எல்லா கனமும்

என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே

எல்லா துதியும் எல்லா உயர்வும்

என்னில் நிலைவரமானவர்க்கே


எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே

எனக்காய் பேசும் இயேசுவுக்கே


1. நான் எடுத்த தீர்மானங்கள்

ஒன்றன் பின்னாக தோற்றனவே

சோராமல் எனக்காக உழைப்பவரே

தோற்காமல் துணைநின்று காப்பவரே


2. என் கை மீறி போனதெல்லாம்

உம் கரத்தால் சாத்தியமே

என் கரம் தவறியே இழந்ததெல்லாம்

உம் கரம் தவறாமல் மீட்டிடுமே


3. பரிந்துரைகள் செய்யாததை

பரக்கிருபை செய்திடுதே

தானாக முன்வந்து உதவினீரே

முன்னுரிமை நானென்று காண்பித்தீரே




https://youtu.be/8ioOe-MJOAw

Post a Comment

0 Comments